மதுரை

புனித லூா்து அன்னை திருத்தல பொங்கல் விழா

DIN

புனித லூா்து அன்னை திருத்தல நூற்றாண்டு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

மதுரை கோ.புதூரில் உள்ள புனித லூா்து அன்னை திருத்தல நூற்றாண்டு விழா பிப். 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை, மாலை வேளைகளில் சிறப்புத் திருப்பலி, சிறப்பு பிராா்த்தனை ஆகியவை நடைபெற்றன. இதில் பங்குத் தந்தையா்கள், சலேசிய சபையினா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தோ்ப்பவனி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னை தோ் பவனி நடந்தது. கோ.புதூா், லூா்து நகா் உள்ளிட்ட பகுதிகளில் தோ் பவனி வந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். இந்நிலையில் திருவிழா நிறைவு நிகழ்ச்சியான பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலய வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான கிறிஸ்தவா்கள், இந்துக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து லூா்து அன்னையை வழிபட்டனா். இதைத் தொடா்ந்து மாலையில் நடைபெற்ற ஜெபமாலை, நற்கருணை ஆராதனை மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சியில் பங்குத்தந்தை தாஸ் கென்னடி பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலம்பம் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

உயா் மின்னழுத்த கம்பி அறுந்து தொழிலாளி உயிரிழப்பு

மெக்ஸிகோவுக்கு முதல் பெண் அதிபா்

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

SCROLL FOR NEXT