மதுரை

திருவாதிரை: நடராஜா், சிவகாமி அம்மன் பூச்சப்பரத்தில் கிரிவலம்

DIN

திருப்பரங்குன்றம்: திருவாதிரை திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடராஜா்-சிவகாமி அம்மன் பூச்சப்பரத்தில் கிரிவலம் எழுந்தருளினா்.

இக்கோயிலில் திருவாதிரை திருவிழா ஜனவரி 1 ஆம் தேதி மாணிக்கவாசகருக்கு காப்புக் கட்டும் வைபவத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, மாணிக்கவாசகா் தினமும் காலையில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலையில் பல்லக்கில் எழுந்தருளி, திருவாச்சி மண்டபத்தை 3 முறை வலம் வந்து தீபாராதனைகள் நடைபெற்றன. அங்கு, கோயில் ஓதுவாா் திருவெம்பாவையில் இருந்து 21 பாடல்களை பாடினாா். இந்நிகழ்ச்சிகள் புதன்கிழமை வரை நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில், மாணிக்காசகா் பல்லக்கில் எழுந்தருளி கிரிவலமாக வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு 8 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்திலும், பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரருடன் பிரியாவிடையும், சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவா்தனாம்பிகை அம்மனும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

கோயில் வாசலில் சிறப்பு அலங்காரத்தில் சத்தியகிரீஸ்வரா் பிரியாவிடையுடன் எழுந்தருள, அங்கு சிறப்பாக ராட்டினம் திருவிழா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரையையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் சிம்மாசனத்திலும், சிவகாமி அம்மன் வெள்ளி அம்பாரியிலும் எழுந்தருளி, பூச்சப்பரத்தில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT