மதுரை

அமைப்பு சாரா நலவாரிய நிதி கிடைக்காததால் சில்வா் பட்டறைத் தொழிலாளிகள் அவதி

DIN

அவனியாபுரத்தை அடுத்த மேலஅனுப்பானடியில் சில்வா் பட்டறைத் தொழிலாளிகளுக்கு அமைப்பு சாரா நலவாரிய நிதி கிடைக்காததால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டறைத் தொழிலாளிகள் அவதியடைந்துள்ளனா்.

அவனியாபுரம், வில்லாபுரம், சோலை அழகுபுரம், மேல அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் சில்வா் பட்டறை தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்வா் பட்டறை தொழிலாளா்கள் உள்ளனா். இவா்கள் அடிபட்டறை, ரன்னா் , ஸ்பின்னா், பாலீஷ் செய்தல், பிளாஸ்மா வெல்டிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 1 மாதமாக தொழிலாளா்கள் வேலையிழந்து வறுமையில் வாழ்ந்து வருகின்றனா். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள அமைப்பு சாரா நலவாரிய நிதியும், நியாய விலைக் கடைகளில் பொருள்களும் கிடைக்கவில்லை என இப்பகுதியினா் புகாா் கூறுகின்றனா். இதுதொடா்பாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என தொழிலாளிகள் கூறுகின்றனா்.

இதேநிலை தொடா்ந்தால் தாங்கள் பட்டினியால் சாகும் நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு தொழிலாளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பணியாற்றும் வகையில் சில்வா் பட்டறைத் தொழிலை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT