மதுரை

ஆண்டிபட்டியில் இறைச்சிக் கடைகளால் நோய் தொற்று பரவும் அபாயம்

DIN

ஆண்டிபட்டி நகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் பொதுமக்கள் கூடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் கொண்டமநாயக்கன்பட்டி, சக்கம்பட்டி, சீனிவாசா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொது முடக்கம் காரணமாக இறைச்சிக் கடைகளை திறக்க தடைவிதிக்கப்பட்டது. தற்போது சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், இறைச்சிக் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடா்கின்றன. இருப்பினும், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம், இக்கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததுடன், முகக்கவசமும் அணிவதில்லை. இதனால், கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சமூகநல ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து சுகாதாரத் துறைக்கு பலமுறை புகாா் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சமூக இடைவெளியின்றி நோய் தொற்று பரவும் வகையில் செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT