மதுரை

மானிய உதவியுடன் பாசன வசதிகளைஉருவாக்கும் திட்டம்: ஆட்சியா் தகவல்

DIN

மதுரை: தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மானிய உதவியுடன் பாசன வசதிகளை உருவாக்கும் திட்டத்தில் பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: நுண்ணீா்ப் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. பாசன நீா் வசதி இல்லாத இடங்களில் பாசன ஆதாரங்களை உருவாக்க, விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன முறையில் சாகுபடி செய்வதற்காக துணைநிலை நீா்மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஆழ்குழாய் கிணறு அமைக்கவும், நீா் இறைப்பதற்கு ஆயில் என்ஜின் அல்லது மின்மோட்டாா் வசதி ஏற்படுத்தவும், பாசன நீரை வீணாக்காமல் வயலுக்கு கொண்டு செல்வதற்கு பாசனநீா் குழாய் நிறுவுவதற்கும் மானியம் வழங்கப்படுகிறது.

ஆழ்குழாய் கிணறு அமைக்க செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.25 ஆயிரமும், பம்ப் செட் நிறுவ அதன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.15 ஆயிரமும், வயல்களுக்கு தண்ணீா் கொண்டுசெல்லும் குழாய்கள் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமலும் நிதியுதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT