மதுரை

கஞ்சா கடத்தல்: இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

DIN

கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா்கள் கோபி, ராஜ்குமாா். இருவரும் 2018-இல் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் வேனில் கஞ்சா கடத்திக் கொண்டு தேனி நோக்கி சென்றனா். அப்போது திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து 240 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கு மதுரை மாவட்ட 2 ஆவது கூடுதல் போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீதான புகாா் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டணையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பி.மதுசூதனன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

SCROLL FOR NEXT