மதுரை

மதுரை நகரில் அதிகரித்து வரும் கரோனா: ஒரே நாளில் 58 பேருக்கு பாதிப்பு

DIN

மதுரை நகரில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 58 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை நகரில் கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் தினசரி ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக கரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மதுரை நகரில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் மாா்ச் 15 முதல் 31-ஆம் தேதி வரை மதுரை நகரில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 600-க்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் மதுரை நகரில் மட்டும் 58 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை எஸ்.ஆலங்குளம், கே.கே.நகா், உத்தங்குடி, அருள்தாஸ்புரம், கோ.புதூா் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT