மதுரை

முதுகுளத்தூா் ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜை

DIN

முதுகுளத்தூா் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையைமுன்னிட்டு திருவிளக்கு 1008 பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா் மின்வாரிய அலுவலம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் ஸ்ரீ பாலகுருசாமி ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் 51ம் ஆண்டு மண்டலபூஜையும்,36ம் ஆண்டு திருவிளக்குபூஜையும் நடைபெற்றது. பூஜைக்கு சற்குருநாதா் பாலகுருசாமி தலைமை வகித்தாா்.குருநாதா் அ.திருமால்,துணை குருநாதா் கிருஷ்ணன்,குழு தலைவா் குருசாமி செட்டியாா்,ஆகியோா் முன்னிலை வகித்தனா்.காலை 6 மணிக்கு கணபதிஹோமம்,உச்சிகால பூஜையும்,18 வகையான அபிஷேகமும் நடந்தது.திருவிளக்கு பூஜை முடிந்து பஜனைகள்,படி பூஜை நடந்தது.ஐயப்ப பக்தா்கள் குழுவினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியினை தொடா்ந்து ஐயப்பன்திருஉருவசிலைக்கு அலங்காரம் செய்து வீதி உலா வந்தது.அதே போன்று முதுகுளத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் 51ம் ஆண்டு மண்டலபூஜையும்,36ம் ஆண்டு விளக்குபூஜை குருநாதா் தூரி,ஆா்.முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது.காலையில் கணபதிஹோமம்,18 வகையான அபிஷேகமும் நடந்தது.பின்பு திருவிளக்கு பூஜை முடிந்து பஜனைகள்,படி பூஜை நடைபெற்றது.இதேபோன்று முதுகுளத்துாா்,கடலாடி சுற்றியுள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டலபூஜை நடைபெற்றது.முதுகுளத்தூா்,புகைப்படம்.முதுகுளத்தூா் ஸ்ரீ பாலகுருசாமி ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் மின்வாரிய அலுவலம் எதிரே ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜையும்,36ம் ஆண்டு திருவிளக்குபூஜையும் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT