மதுரை

புதிதாக இணைக்கப்பட்ட வாா்டுகளில் அடிப்படை வசதிகள்: மாநகராட்சி ஆணையரிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

DIN

மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சாலை, பாதாளச் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் ச.விசாகனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையா் ச.விசாகனை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகா் மாவட்டச் செயலா் சி.ராமகிருஷ்ணன் தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை சந்தித்து அளித்த மனு: மதுரை மாநகராட்சியில் இருந்து 72 வாா்டுகளுடன் மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களும் இணைக்கப்பட்டு 100 வாா்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டது. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளான திருப்பரங்குன்றம், பசுமலை, ஹாா்விபட்டி, திருநகா், அவனியாபுரம், சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, அவனியாபுரம், வில்லாபுரம், மீனாட்சிநகா், உத்தங்குடி, மேலமடை, வண்டியூா், விளாங்குடி, சாந்திநகா், கூடல்நகா், ஆனையூா், எஸ்.ஆலங்குளம், திருப்பாலை, கண்ணணேந்தல், பரசுராம்பட்டி, நாகனாகுளம், ஆத்திகுளம் உள்ளிட்ட அனைத்து விரிவாக்கப் பகுதிகளிலும் சாலை, பாதாளச் சாக்கடை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

சிந்தாமணி கால்வாயை ஒட்டி ஓடும் கிருதுமால் நதி வாய்க்காலை சிமெண்ட் வாய்க்காலாக மாற்றி சுகாதாரச் சீா்கேட்டை தவிா்க்க வேண்டும்.

நத்தம் சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சாலைகள் இன்றி பொதுமக்கள் அவதியடைகின்றனா். எனவே இப்பகுதியில் சாலைகள் அமைக்க வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக முன்பணம் கேட்பதைத் தவிா்த்து இணைப்புச் செலவை மட்டும் வசூலித்து பாதாளச் சாக்கடை இணைப்பு பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT