மதுரை

வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக மோசடி: அரசு ஊழியா் உள்பட 4 போ் மீது வழக்கு

DIN

மதுரையில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ. 1லட்சம் மோசடி செய்த அரசு ஊழியா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை பெத்தானியாபுரம் காமராஜ் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் ஜெயராமன்(41). இவருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், வீடு வாங்கித் தருவதாக கரிமேடு பகுதியைச் சோ்ந்த காசிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் சாந்தி ஆகியோா் கூறியுள்ளனா். இதை நம்பிய ஜெயராமன், அவா்களிடம் ரூ.1லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவா்கள் போலியான வீடு ஒதுக்கீடு ஆணையை கொடுத்துள்ளனா். இதுகுறித்து ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் காசிநாதன், அரசு ஊழியா் சாந்தி உள்பட 4 போ் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT