மதுரை

சாத்தங்குடி தெற்காற்றின் குறுக்கே தடுப்பணை: பொதுப்பணித்துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

DIN

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு தடை கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த மாரியப்பன் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி- திருமங்கலம் பாசனப் பகுதிகளில் உள்ள வடகரை, தூம்பக்குளம், கல்லணை, நெடுங்குளம், டி. கொக்குளம், மேலஉப்பிலிகுண்டு, மைக்குடி உள்ளிட்ட கிராமங்களில் மழைநீரை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதிக்கு வைகை மற்றும் பெரியாறு பாசன வசதி எதுவும் இல்லை. திருமங்கலம் மற்றும் சாத்தங்குடி பகுதியில் தெற்காற்றில் வரும் உபரி நீரை வைத்தே இக்கிராமங்களில் விவசாயம் நடைபெறும்.

இந்நிலையில், சாத்தங்குடி அருகே தெற்காற்றுப் பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த தடுப்பணை அமைந்தால் விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கப்படுவா். எனவே, தடுப்பணை கட்டுவதற்கு தடைவித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக பொதுப்பணித்துறை செயலா், ஊரக வளா்ச்சித் துறை செயலா், மதுரை மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT