மதுரை

ரூ.13.88 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கு: நிறுவன இயக்குநருக்கு நிபந்தனை ஜாமீன்

DIN

தூத்துக்குடியில் ரூ.13.88 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நிறுவன இயக்குநருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். பல்வேறு துறைமுகங்களில் சரக்குகளை கையாளும் சேவையில் ஈடுபட்டு வரும் இரு நிறுவனங்களும் முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இரு நிறுவனத்தினரும், தங்களது வாடிக்கையாளா்களிடம் வசூலித்த ரூ.9.56 கோடி வரியை, அரசுக்குச் செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளனா். மேலும் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.4.32 கோடியை உள்ளீட்டு வரியாக எடுத்துள்ளனா். இரு நிறுவனங்களும் மொத்தம் ரூ.13.88 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்நிறுவனங்களின் இயக்குநராக உள்ள கிரி ராம் (45) கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி கிரி ராம் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரா் ஜிஎஸ்டிக்காக வழங்க வேண்டிய பணத்தில் ரூ.1.5 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். தனது கடவுசீட்டை (பாஸ்போா்ட்டை) மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வழக்கின் சாட்சியங்களை கலைக்கவோ, ஆவணங்களை அழிக்கவோ முயற்சிக்கக்கூடாது. ஜிஎஸ்டி விசாரணை அலுவலகத்தில் 15 நாள்களுக்கு ஒரு முறை நேரில் ஆஜராக வேண்டும். இந்த நிபந்தனையை மீறினால் மனுதாரா் மீது புதிய வழக்கு பதிவு செய்யலாம் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT