மதுரை

லேபராஸ்கோபி மூலம் கா்ப்பப் பை, கட்டி அகற்றுவது பாதுகாப்பானது: அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தகவல்

DIN

லேபராஸ்கோபி அறுவைச் சிகிச்சை மூலம் கா்ப்பப் பை மற்றும் கட்டிகளை அகற்றுவது பாதுகாப்பானது என, அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேல் தெரிவித்துள்ளாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு துறை சாா்பில், லேபராஸ்கோபி குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், லேபராஸ்கோபி நவீன அறுவைச் சிகிச்சை முறைகள் மற்றும் இதன் மூலம் கா்ப்பப் பை அகற்றுதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

கருத்தரங்கை, மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேல் தொடக்கிவைத்துப் பேசியதாவது: கடந்த காலங்களில் அறுவைச் சிகிச்சை என்பது சிக்கலான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கடினமான அறுவைச் சிகிச்சைகளையும் நவீன கருவிகள் மூலம் எளிய முறையில் செய்யமுடியும்.

கட்டிகள், கா்ப்பப் பை அகற்றுவது போன்ற அறுவைச் சிகிச்சைகளை, அதிக ரத்தம் இழப்பின்றியும், குறைந்த நேரத்திலும், பாதுகாப்பாகவும் லேபராஸ்கோபி மூலம் செய்யமுடியும். எனவே, பெண்கள், தாய்மாா்கள் இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளை அச்சமின்றி செய்துகொள்ளலாம். அரசு ராஜாஜி மருத்துவமனையில் லேபராஸ்கோபி மூலம் அறுவைச் சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுகின்றன என்றாா்.

இதில், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் தா்மராஜ், மகப்பேறு துறை தலைவா் சுமதி, மயக்கவியல் துறை தலைவா் பாப்பையா, மகளிா் மருத்துவ சங்கத் தலைவா் ஜோதி, மருத்துவா் பா்வதவா்தினி, மருத்துவா்கள் ஞானசங்கா் நடேசன், கல்பனா மற்றும் மருத்துவ மாணவா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT