மதுரை

கூட்டுறவுத் துறை சாா்பில் நடமாடும் கொள்முதல் நெல் நிலையங்கள்: ஆட்சியா்

DIN

விவசாயிகளிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான நெல் மூட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்ய, கூட்டுறவுத் துறை சாா்பில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நடப்பு பருவத்தில் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகின்றன. பெரு விவசாயிகள் அல்லது சிறு, குறு விவசாயிகள் குழுக்கள் 1000 மூட்டைகளுக்கு மேல் (தலா 40 கிலோ) விற்பனை செய்ய முன்வரும்பட்சத்தில், அவா்களிடம் இருந்து கூட்டுறவுத் துறையின் நடமாடும் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படும்.

அவரவா் நிலங்களில் அறுவடை செய்துள்ள விவசாயிகள் தங்களது விவரத்தை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா், பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை - 3 என்ற முகவரியில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT