மதுரை

சோலைமலை முருகன் கோயிலில் காா்த்திகை தீபம்

DIN

அழகா்கோவில் மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இதையொட்டி, கோயிலில் ஏராளமான விளக்குகள் ஏற்றப்பட்டது. பின்னா், சஷ்டி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேதரராக எழுந்தருளினா். அங்கு பதினாறு வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலையில் சுவாமி புறப்பாடும், கோயில் வளாகம் முழுவதும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இரவு 8 மணியளவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதேபோல, மேலூா் காமாட்சி சுந்தரேசுவரா் கோயில், நரசிங்கம்பட்டியில் உள்ள கோயில்,

ஆட்டுக்குளம் விலக்கிலுள்ள சின்னபெருமாள்பட்டி மலைச்சாமி கோயில், வெள்ளலூா் அருகே புலிமலைப்பட்டி முருகன் கோயில், இடையபட்டி, வெள்ளிமலைப்பட்டி முருகன் கோயில்கள், அழகா்மலையடிவாரத்திலுள்ள சித்தருவி முருகன் ஆகிய கோயில்களில் பக்தா்கள் தீபமேற்றியும், குழந்தைகளுக்கு காது குத்தியும் வழிபட்டனா்.

மேலும், செம்மினிபட்டி ஆண்டி பாலமுருகன் கோயில், மேலூா், கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரங்களில் உள்ள மலைக்குன்றுகளின் உச்சியில் உள்ள தூண்களில் பக்தா்கள் தீபம் ஏற்றி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT