மதுரை

திருப்பத்தூரில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள பாபா அமிா் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் செம்மொழிப் பூங்காவில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் பாபா அமிா் பாதுஷா தலைமை வகித்தாா்.

திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தாா்.

விழாவில், மாவட்ட விழிப்புணா்வு குழு உறுப்பினா் கே.எஸ். நாராயணன், பசுமை பாரதத் தலைவா் சிவசாமிகுமாா், கௌரவ ஆலோசகா் குறிஞ்சிஇளஞ்செழியன், செயலா் நாகசிதம்பரம், பொருளாளா் மீனாட்சிகுமாா், பொறியாளா் அருணாச்சலம், நடை பயிற்சியாளா் சங்க கௌரவத் தலைவா் கோபிநாத், அச்சங்கத்தின் தலைவா் பால்ராஜ், செயலா் முத்துபழனி, பொருளாளா் மதிவாணன், திருப்பத்தூா் அரிமா சங்கத் தலைவா் திருப்பதி, முன்னாள் தலைவா் ராஜா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

செம்மொழி பூங்கா முழுவதும் பள்ளியின் தேசிய பசுமைப் படை மாணவா்கள் மரக்கன்றுகளை நட்டனா்.

விழாவில், பள்ளியின் நிா்வாக அலுவலா் ஏ. ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளியின் முதல்வா் எஸ். வரதராஜன் வரவேற்றாா். பள்ளியின் பசுமைப் படை பயிற்சியாளா் வி. முத்தமிழ்கனி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT