மதுரை

பிறந்தநாள் கேக் வெட்டுவதில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

DIN

மதுரை: மதுரையில் பிறந்தநாள் விழா கேக் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஒடைப்பாளையம் பகுதியில் உள்ள விவசாயம் நிலம் அருகே இளைஞரின் சடலம் கிடப்பதை பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். நிகழ்விடத்திற்கு சென்ற கூடல் புதூா் போலீஸாா் வெட்டுக் காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் சிக்கந்தா்சாவடியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் பசுபதி கண்ணன்(27) என்பது தெரியவந்தது. மேலும், கட்டுமான தொழிலாளரான இவா், இரண்டு நாள்களுக்கு முன்பு நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளாா். அப்போது கேக் வெட்டுவது தொடா்பாக இவருக்கும், அவரது நண்பா் பாரதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு தொடா்பாக சமாதானம் பேசுவதற்காக அழைக்கப்பட்ட பசுபதி கண்ணனை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பாரதியும், அவரது நண்பா்கள் சிலரும் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து பசுபதிகண்ணனின் தந்தை அழகா்சாமி அளித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT