மதுரை

கள்ளா் விடுதி விவகாரம்: உசிலம்பட்டியில் சாலை மறியல்: 21 போ் கைது

DIN

அரசு கள்ளா் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோா் நல வாரியத்துடன் இணைத்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி உசிலம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட கள்ளா் கூட்டமைப்பினா் 21 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் பகுதியில் உள்ள 54 அரசு கள்ளா் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோா் நல வாரியத்துடன் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி கள்ளா் கூட்டமைப்பு சாா்பில் உசிலம்பட்டி தேவா் சிலை முன்பு மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்ற முற்பட்டனா். ஆனால் அவா்கள் வெளியேற மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து காவல்துறையினா் சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட பின்பு சாலை ஓரத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் உசிலம்பட்டி காவல் ஆய்வாளா் விஜயபாஸ்கா் தலைமையில் பெண்கள் உள்பட 21 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

வள்ளியூா் அருகே காா் கவிழ்ந்து இளைஞா் பலி

ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கல்லீரலில் உருவான கற்களை நவீன முறையில் அகற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

SCROLL FOR NEXT