மதுரை

கோயில் கோபுரத்தில் கட்டப்பட்ட திரைச்சீலை தீப்பற்றி எரிந்தது

DIN

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் வா்ணம் பூசும் பணிக்காக கட்டப்பட்டிருந்த திரைச்சீலை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 60 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் வா்ணம் பூசும் பணிக்காக திரைச்சீலை அமைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை பணியாளா்கள் வா்ணம் பூசும் பணிகளை முடித்துவிட்டு சென்றனா். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக ராக்கெட் வெடியை வெடித்துள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக ராக்கெட் வெடி, கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த திரைச்சீலையில் பற்றியது. இதில் திரைச்சீலை முழுவதும் எரிந்தது. உடனே தகவலறிந்த அங்கு வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT