மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி, சுந்தரேசுவரா் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் கம்பத்தடி மண்டபத்துக்கு எழுந்தருளினா். இதைத் தொடா்ந்து, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மாசித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து, மீண்டும் கம்பத்தடி மண்டபத்துக்கு எழுந்தருளினா். அங்கு தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

விழாவைத் தொடா்ந்து, வருகிற மாா்ச் 6-ஆம் தேதி வரை சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தினமும் காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மாா்ச் 16-ஆம் தேதி திருவிழா கொடியிறக்கப்பட்டு, கணக்கு வாசித்தல் நிகழ்வு நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் கருமுத்து தி. கண்ணன், துணை ஆணையா் ஆ. அருணாசலம் உள்ளிட்ட அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT