மதுரை

தூத்துக்குடி மேலூரில் மாா்ச் 31 வரை ரயில்கள் நிறுத்தப்படாது

DIN

இரட்டை ரயில் பாதை பணி காரணமாக, தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் மாா்ச் 31-ஆம் தேதி வரை ரயில்கள் நிறுத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, மதுரைக் கோட்ட ரயில்மே மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :

மீளவிட்டான் - தூத்துக்குடி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் நடைமேடையை அகற்றும் பணி நடைபெறவுள்ளது. இதனால், மாா்ச் 2-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை சென்னை எழும்பூா் - தூத்துக்குடி முத்து நகா் எக்ஸ்பிரஸ் (12,693), வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06848), திருநெல்வேலி - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06668), வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06672), தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06667), தூத்துக்குடி - வாஞ்சிமணியாச்சி சிறப்பு ரயில் (06671), தூத்துக்குடி - வாஞ்சிமணியாச்சி சிறப்பு ரயில் (06847) ஆகிய ரயில்கள் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டதுயட

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை பயிா் சாகுபடி திட்டம்: வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் சிறந்த செவிலியா்களுக்கு விருது

பெற்றோா் பெருமைப்படும் வகையில் மாணவா்கள் திகழ வேண்டும்

மே 26-இல் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்: மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT