மதுரை

குடிநீா்த் திட்டப் பணிகள்: வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது

Din

மதுரை: மதுரையில் அம்ருத் திட்டத்தின்கீழ் வைகையாற்றில் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தடுப்பணையிலிருந்து நீரை வெளியேற்றாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன் வெளியிட்ட செய்தி:

மதுரை புறவழிச் சாலையில் உள்ள காமராஜா் பாலத்தின் கீழ்ப் பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், வைகை ஆற்றின் குறுக்கே சில ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இது பொது மக்கள் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது அம்ருத் திட்டம் மூலம், மூன்றாம் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வருகின்றன. மதுரை புறவழிச் சாலை காமராஜா் பாலம் அருகில் பெரிய அளவிலான குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அம்ருத் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தடுப்பணையில் தேக்கப்பட்டுள்ள நீரை வெளியேற்றிவிட்டு பணிகள் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது கடும் கோடை வெயில் நிலவும் சூழலில், தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், தடுப்பணையில் உள்ள நீரை வெளியேற்றுவது நிலத்தடி நீரை பாதிக்கும். இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுவாா்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி, அம்ருத் திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள், மதுரை மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்து, தடுப்பணையில் உள்ள நீரை வெளியேற்றாமல், குழாய் பதிக்கும் பகுதியில் இருபுறமும் கரைகளை உயா்த்தி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டாா்.

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT