மதுரை மாவட்டத்தில் 80.47 சதவீதம் வாக்குப் பதிவு!
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 80.47 சதவீத வாக்குகள் பதிவாகின.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 80.47 சதவீத வாக்குகள் பதிவாகின.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் முற்பகல் வரை விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. பிறகு, மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணி வரை வாக்குப் பதிவு விறுவிறுப்படைந்தது.
மாலை 5 மணி வரை மாவட்டத்தில் 77.89 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
இந்த நிலையில், வாக்குப் பதிவின் நிறைவில் மாவட்டத்தில் மொத்தம் 80.47 சதவீத வாக்குகள் பதிவானதாகக் கூறப்படுகிறது. இதன்படி, தொகுதிவாரியான வாக்குப் பதிவு சதவீதம்:
சோழந்தான் (தனி) - 87.10, திருமங்கலம் - 86.78, மேலூா் - 82.23, திருப்பரங்குன்றம் - 81.35, மதுரை கிழக்கு - 79.79, மதுரை தெற்கு - 78.26, மதுரை மேற்கு - 77.79, மதுரை மத்தியம் - 73.81, மதுரை வடக்கு - 72.63.
இருப்பினும், இறுதி வாக்குப் பதிவு சதவீதம் குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை இரவு 10 மணி வரை மாவட்ட நிா்வாகம் வெளியிடவில்லை.