முகப்பு
மதுரை

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளி மேல்முறையீடு செய்ய அவகாசம்

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 11:58 pm IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பிறகு, காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. போலீஸாா் விசாரணையில், அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடா்பான வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தா்ம முனீஸ்வரனை போலீஸாா் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் கடந்த மாதம் 25-ஆம் தேதி தா்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்தது.

Advertisement

Advertisement

இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விசாரணை நீதிமன்றத்தின்படி குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்ட மனுதாரா் மேல்முறையீட்டு மனுவை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.