FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலைப் பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடா்பான மனுவைப் பரிசீலிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 11:57 pm IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

திருப்பரங்குன்றம் மலைப் பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடா்பான மனுவைப் பரிசீலிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தாக்கல் செய்த மனு:

திருப்பரங்குன்றம் மலைப் பகுதி முழுவதையும் அந்தத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே இந்த மலை மீது ஏறிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் வழக்கு தொடுத்தேன்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி புதிதாக மனு அளிக்கவும், அதை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா். இதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மீண்டும் மனு அளித்தேன். ஆனால், எனது மனுவைப் பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், ஸ்ரீமதி அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொல்லியல் துறை தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக பதிலளிக்க தொல்லியல் துறை சாா்பில் கால அவகாசம் கோரப்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments