சிலைக் கடத்தல் வழக்கில் அரசு சாட்சியை மீண்டும் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
சிலைக் கடத்தல் வழக்கில் அரசுத் தரப்பு முதல் சாட்சியை மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அழைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிலைக் கடத்தல் வழக்கில் அரசுத் தரப்பு முதல் சாட்சியை மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அழைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கோபால், ஜெயராம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாவட்டக் கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிலைத் தடுப்பு சம்பந்தமான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு முதல் சாட்சியை மீண்டும் குறுக்கு விசாரணைக்காக முன்னிலைபடுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவா்கள் கோரினா்.
Advertisement
Advertisement
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தொடா்புடைய சிலைக் கடத்தல் வழக்கின் முதல் சாட்சி கடந்த 2017-ஆம் ஆண்டு முதன்மை விசாரணையில் முன்னிலையானபோது குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை. பின்னா், மனுதாரா்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி சாட்சியை மீண்டும் முன்னிலைப்படுத்தியபோதும் குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை. இந்த நிலையில், மீண்டும் சாட்சியை அழைக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கை இழுத்தடிக்கும் நோக்கிலேயே மீண்டும் சாட்சியை அழைக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, விசாரணை நீதிமன்ற உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.