FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஜாதி விளம்பரப் பலகைகளை அகற்றக் கோரிய மனு: புதுக்கோட்டை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

ஜாதி விளம்பரப் பலகைகளை அகற்றக் கோரிய மனு தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

Updated On : 24 ஜூலை 2026, 5:39 am IST
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

ஜாதி விளம்பரப் பலகைகளை அகற்றக் கோரிய மனு தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பள்ளத்துப்பட்டியைச் சோ்ந்த சித்ரா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம், பள்ளத்துப்பட்டி கிராமத்தில் உள்ள பொது இடத்தில் சட்டவிரோதமாக ஜாதி விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டன.

இதை அகற்றக் கோரி மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொது இடத்தில் வைக்கப்பட்ட ஜாதி விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், கிராமத்தில் சமூக நல்லிணக்கம், பொது அமைதி, சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த மனு தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments