FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்ய கோரிய மனு மீது இன்று மீண்டும் விசாரணை

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கின் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமைக்கு (ஜூலை 15) ஒத்திவைத்தது.

Updated On : 15 ஜூலை 2026, 5:30 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கின் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமைக்கு (ஜூலை 15) ஒத்திவைத்தது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்த தா்ம முனீஸ்வரனை போலீஸாா் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தா்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்து, தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி கடந்த மே 25-ஆம் தேதி தீா்ப்பளித்தாா்.

இதனிடையே, இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் காவல் துறை சாா்பில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக தா்ம முனீஸ்வரன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா். பூா்ணிமா அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, விசாரணை நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாக தா்ம முனீஸ்வரன் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மரண தண்டனையை உறுதிப்படுத்தும் வழக்குகளில் ஒரு மூத்த வழக்குரைஞா் தலைமையில், இரு வழக்குரைஞா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு உதவி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில், இலவச சட்ட உதவி மையத் தலைவா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்ட உதவி மையம் சாா்பில் வழக்குரைஞா்களை நியமிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவாளா் விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு (ஜூலை 15) ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments