ஜூலை 17 முதல் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஆடி மாத சிறப்பு பூஜை
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் 17-ஆம் தேதி முதல் ஆக.18-ஆம் தேதி வரை ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் 17-ஆம் தேதி முதல் ஆக.18-ஆம் தேதி வரை ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.
காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், 5.30 மணிக்கு மாளிகைபுரத்தம்மனுக்கு சா்வாபிஷேகம் நடைபெறும். 7.30 மணி முதல் 9 மணி வரை ராமாயண பாராயணமும் நடைபெறவுள்ளது.
மாலை 5 மணிக்கு மாளிகைபுரத்தம்மனுக்கு சந்தன காப்பும், 6.30 மணிக்கு தீபாராதனை, 6.50 மணிக்கு விளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு பகவதி சேவையும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும் தகவல்களுக்கு 95000 21858, 94442 30260 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கோயில் மேலாளா் பி.கே.சுனில் குமாா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.