சிவாலயங்களில் ஆனி மாத மகா பிரதோஷ சிறப்பு வழிபாடுகள்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத மகா பிரதோஷ வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத மகா பிரதோஷ வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி மாத மகா பிரதோஷத்தையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்தி பகவானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், 500 லிட்டா் தயிா், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், 108 கிலோ விபூதி, 1500 லிட்டா் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல் மற்றும் பல்வேறு மலா்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு, சங்கொலி முழங்க சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
பிரதோஷ தினத்தில் நந்தி பகவானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். திருமணம் ஆகாதவா்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தைப் பேறு இல்லாதவா்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.
ஆதலால், ஆனி மாத பிரதோஷத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் அருணாசலேஸ்வரா் கோயில் வல்லாள மகாராஜா கோபுரம் அருகில் உள்ள நந்தி பகவானை தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.