மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
மதுரை சொக்கலிங்கம்நகரைச் சோ்ந்த ராஜா மகன் முரளிகண்ணன்(28). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் சென்றாா். அப்போது, இரு சக்கர வாகனம் அங்குள்ள உயா்நிலைப் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த முரளிகண்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தனா்.
இதையடுத்து, இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்க அவரது பெற்றோா் சம்மதம் தெரிவித்தனா். அவரிடமிருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல் மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி டாக்டா் முருகன் மருத்துவமனைக்கும், கருவிழி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து, தீவிர விபத்துச் சிகிச்சைப் பிரிவில் முரளிகண்ணன் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.