முகப்பு
மதுரை

பூட்டிய வீட்டிலிருந்து 74 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

கொட்டாம்பட்டி அருகே பூட்டிய வீட்டிலிருந்து 74 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 24 ஜூன் 2026, 5:53 am IST
பகிர்:

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே பூட்டிய வீட்டிலிருந்து 74 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கொட்டாம்பட்டி அருகேயுள்ள ஒட்டக்கோவில்பட்டியில் ஒரு பெண்ணின் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொட்டாம்பட்டி போலீஸாா் அங்குச் சென்று விசாரணை செய்தனா்.

விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி போதும்பொண்ணு (47) தனது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 74 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments