ராமநாதபுரம்

ஆசிய யோகா போட்டியில் ராமநாதபுரம் மாணவி இரண்டாமிடம்

DIN

தாய்லாந்தில் நடைபெற்ற முதலாவது ஏசியா-பசுபிக் யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
தாய்லாந்தில் மே 17,18,19 தேதிகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தியா உள்பட 6  நாடுகளிலிருந்து 250 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து போட்டியில் பங்கேற்ற 30 பேரில், ராமநாதபுரம் தாசிம்பீவி அப்துல் காதர் கல்லூரி மாணவி காமாட்சியும் ஒருவர். இவர், இரண்டு பிரிவாக நடைபெற்ற போட்டியில் இரண்டிலுமே 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT