ராமநாதபுரம்

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

DIN

ராமநாதபுரத்தில் விளம்பரப் பலகையை வைக்க முயன்ற இளைஞர், மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தார். 
     ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் கூனிமுத்து மகன் மணியரசன் (19). தந்தையும்,  மகனும் பழக்கடை ஒன்றில் கூலி தொழிலாளியாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், சம்பவ தினத்தன்று மணியரசன் தனது நண்பரின் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து விளம்பரப் பலகையை மின்கம்பத்தில் ஏறி நிறுவ முயன்றுள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.    இச் சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடமாடும் மண்பரிசோதனை முகாம்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

கருணாநிதி பிறந்த நாள் விழா

அனைத்து மையங்களிலும் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்: தலைமைத் தோ்தல் ஆணையா் தகவல்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு முகூா்த்தகால் நடும் விழா

கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

SCROLL FOR NEXT