முகப்பு
ராமநாதபுரம்

எம்ஜிஆரின் 31 ஆவது நினைவு தினம்: சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர்  எம்ஜிஆரின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டங்களில்

Updated On : 25 டிசம்பர் 2018, 6:24 am IST
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வர்  எம்ஜிஆரின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டங்களில் அதிமுகவினர் மௌன ஊர்வலம் நடத்தி  அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும்  மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பரமக்குடி: பரமக்குடியில் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கே.சி.ஆணிமுத்து, சோமாத்தூர் ஆ.சுப்பிரமணியன், தலைமைக் கழகப் பேச்சாளர் எம்.கே.ஜமால், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பொருளாளர் கே.அப்துல்மாலிக், மாவட்ட எம்.ஜி.ஆர்  அணி செயலாளர் ஐ.வின்செண்ட் ராஜாஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் எஸ்.வி.கணேசன் வரவேற்றார். 
முன்னதாக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கருப்பு வில்லை அணிந்து எமனேசுவரம் நேருஜி மைதானத்திலிருந்து மெளனஊர்வலம் சென்றனர். ஜெயலலிதா பேரவை நகர் செயலாளர் எம்.வடமலையான் நன்றி கூறினார்.  நகரில் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 
கமுதி:  கமுதியில் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.  நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலர் கருமலையான், எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் சேகரன், புத்துருத்தி கூட்டுறவு சங்கத்தலைவர் டி.நாகராஜ்,  எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலர் மாரிமுத்து, துணைச் செயலர் முருகேசன், புதுக்குளம் கூட்டுறவு சங்கத் தலைவர் வில்வதுரை, மாவட்டப் பிரதிநிதி மூவர், புத்துருத்தி காசிநாதன், சிவன், ஒன்றிய மகளிரணி செயலர் குப்பம்மாள், நகர மகளிரணிச் செயலர் பொம்மி, தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலர் சின்னாண்டுதேவன், நகர இளைஞரணிச் செயலர் வேலவேந்தன், ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் இஸ்மாயில், பாசறை செயலாளர் ஜோதிராமர் உள்பட பலர் பங்கேற்றனர். 
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. மானாமதுரை நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந் நிகழ்ச்சிகளில் அதிமுக ஒன்றியச் செயலாளர் எம்.குணசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
இளையான்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.                                             
திருப்பத்தூர்:  திருப்பத்தூர் காந்தி சிலையருகே அதிமுகவினர் ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம் மற்றும் நகரச் செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
பின்னர் அங்கிருந்து பேருந்து நிலையம் மதுரை சாலை வழியாக அண்ணாசிலை வரை மெளன ஊர்வலம் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செய்தனர். 
இதில் முன்னாள், ஒன்றியச் செயலாளர்கள் ஏ.விநாகராஜன், துவார்மூர்த்தி, பூலாங்குறிச்சி ராமையா, ஒன்றியத் துணைச் செயலாளர் முருகேசன், வழக்குரைஞர் ராஜசேகரன்,  கூட்டுறவு சங்க இயக்குநர் என்.பி.சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் மலைச்சாமி, செந்தில், அப்துல்லா,  ஆனந்த்  உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த  எம்ஜிஆர் உருவப் படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் 
கழக மாவட்டச் செயலாளர்  கே.கே.உமாதேவன்  தலைமையில் எம்ஜிஆரின் உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர். 
இதில் நகரச் செயலாளர் ரஹீம், முன்னாள் பேரூராட்சிமன்றத் தலைவர் சோமசுந்தரம், பூக்கடை ஜெயபால், நாகராஜன், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments