ராமநாதபுரம்

திருவாடானையில் மகளிர் காவல் நிலைய புதிய கட்டடம் சேதம்

DIN

திருவாடானையில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் காவல் நிலைய கட்டடத்தில் காரைகள் பெயர்ந்து விழுவதால் போலீஸார் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர்.
திருவாடானையில்  ரூ.41 லட்சம் செலவில் கட்டப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் 21 ஆம்தேதி காணொளி  மூலம் திறந்து வைத்தார். இந்த கட்டடம்  திறக்கப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் சுவற்றில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து உதிர்ந்துவிட்டன. மேலும் ஜன்னல் மேல் போடப்பட்டுள்ள சிலாப்புகளும்  பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு பணியாற்றும் போலீஸார் அச்சத்துடன் உள்ளனர்.  
மேலும் இந்த கட்டடத்தின் உள்ளே குளியல் அறை, கழிப்பறைகளில் குழாய் வசதி  செய்து தரப்படவில்லை. எனவே கட்டடத்தை சீரமைப்பது குறித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT