ராமநாதபுரம்

அரசு தட்டச்சு தேர்வு 3000 பேர் பங்கேற்பு

DIN


ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு தட்டச்சு தேர்வில் 3000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை இத்தேர்வு இளநிலை, முதுநிலை என இரு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி, பரமக்குடியில் முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற்றது. முதல் நாளான சனிக்கிழமை 3000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமையும் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அரசு தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்கும் போது சிறப்புத் தகுதி மதிப்பெண்கள் சலுகையாக கிடைக்கும் என ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பயிலக சங்க செயலர் சரவணபவா தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT