ராமநாதபுரம்

கடலில் மூழ்கி உயிரிழந்த ராமேசுவரம் மீனவர் உடல் இன்று கொண்டு வரப்படுகிறது

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படையினர் விரட்டியதில் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவரின் உடல் விமானம் மூலம் வியாழக்கிழமை (ஜனவரி 17) திருச்சி கொண்டுவரப்படுகிறது. உடலை வாங்க உறவினர்கள் திருச்சிக்கு சென்றுள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். அப்போது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் முனியசாமி(65) கடலில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடல் இலங்கை யாழ்ப்பாணம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.
 இதை இலங்கை காவல்துறையினர் மீட்டு யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடன் சென்ற மீனவர்கள் அடையாளம் காட்டிய பின்னர் பிரேத பரிசோதனைமுடிந்து பிண அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனிடையே மீனவர் முனியசாமியின் உடலை கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இலங்கையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை (ஜனவரி 17) திருச்சி கொண்டு வர இந்திய, இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து மீனவரின் உடலை வாங்க மீன்வளத்துறையினர் மற்றும் மீனவரின் உறவினர்கள் திருச்சிக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT