ராமநாதபுரம்

வாகனச் சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

DIN

ராமநாதபுரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.3 லட்சம் வரை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் வழுதூர் விலக்கு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெல்லையிலிருந்து வந்த காரை சோதனையிட்டபோது அதில் வந்த தங்கப்பாண்டியிடம் ரூ.1.54 லட்சம் இருப்பது தெரியவந்தது. கட்டுமானப் பணிக்கு கொண்டு செல்வதாக தங்கப்பாண்டி கூறிய நிலையில், அதற்கான ஆவணம் காட்டப்படாததால் பணம் கைப்பற்றப்பட்டது.
 அதேபோல, திருப்பூர் அவினாசி பகுதியைச் சேர்ந்த அனஸ் என்பவர் பரமக்குடியிலிருந்து ராமேசுவரம் நோக்கி வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்ற நிலையில், அவரிடமிருந்து ரூ.1.46 லட்சம் கைப்பற்றப்பட்டது. கார் வாங்கி விற்கும் தொழில் செய்வதாக கூறிய அனஸ் அதற்கான ஆவணங்களை காட்டவில்லை எனக் கூறி தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT