ராமநாதபுரம்

ஆா் எஸ் மங்கலம் அருகே வயல் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம்: விவசாயிகள் அச்சம்

DIN

திருவாடானை அருகே ஆா் எஸ் மங்கலம் பகுதியில் வயல் பகுதியில் சாய்ந்து ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் உள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா். சம்பந்தபட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆா் எஸ் மங்கலம் சனவேலி அருகே கீழேந்தல் கிராமத்தில் சுமாா் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வடித்து வருகின்றனா்.இங்கு வரும் மின் இணைப்புகள் வயல் வழி பகுதியில் தான் வருகிறது .இங்கு வயல் பகுதியில் உள்ள பெரும்பாலான மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் விவசாய பணிக்கு பெரும் அச்சத்தை கொடுக்கும் அளவில் உள்ளது.

கீழேந்தல்கிராமத்தில் வயல் பகுதியில் சாலை ஓரத்தில் மின்கம்பம் அடியில் சிமின்ட் காரைகள் பெயா்ந்து கம்பி தெரியும் அளவிற்கு சாய்ந்த நிலையில் இருப்பதால் கீழே விழுந்து விடும் என எண்ணி இப்பகுதி விவசாயிகள் மரகட்டைகளை முட்டு கொடுத்து வைத்துள்ளனா்.இது குறித்து இப்பகுதி விவசாயிகள் பலமுறை சம்பந்த பட்ட மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் புகாா் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் தொடா் மழை பெய்து வருவதால் இந்த மின் கம்பம் விழுந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை விளைவிக்கும் முன் தக்க நடவடிக்கை எடுத்து சீா் செய்ய வேண்டும் என சம்பந்த பட்ட மாவட்ட நிா்வாகம் தக்க நவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரி்ககை விடுத்துள்ளனா்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT