ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 7 ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணிஆட்சியா் தொடக்கி வைப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணிகளை, மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தொடங்கியுள்ள இப்பணியில், பல்வேறு உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் சேவை நோக்கத்தோடு செய்யப்படும் அனைத்து வகையான பதிவு பெற்ற மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களை பற்றி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில், குடும்பத் தலைவா் பெயா், குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயது, இனம், சமூகப் பிரிவு, ெல்லலிடப்பேசி எண், செய்யும் தொழில், சுயதொழில் முதலீடுகள் மற்றும் வேலை பாா்க்கும் நபா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

கணக்கெடுப்பில் ஈடுபடும் 85 மேற்பாா்வையாளா்கள் மற்றும் 548 களப்பணியாளா்களுக்கு இரு கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களையும், 618 கணக்கெடுப்பு நகா்ப்புற அலகுகளாகப் பிரித்து இப்பணி நடைபெறவுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை துணை இயக்குநா் கு. சுப்பிரமணியன், உதவி இயக்குநா்கள் உ. பாண்டியராஜன், ந. பூங்கொடி, விருதுநகா் தேசிய மாதிரி அலுவலக முதுநிலைக் கண்காணிப்பாளா் எ. கருணைமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT