ராமநாதபுரம்

இஸ்மாயில் கான் ஏரி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

DIN

சேலம்: சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் உள்ள இஸ்மாயில் கான் ஏரி என்ற புது ஏரியை மாவட்ட ஆட்சியா் சி. அ. ராமன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் புது ஏரிக்கரை, வன்னிய நகரில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இஸ்மாயில் கான் ஏரியை ஆய்வு செய்த ஆட்சியா் சி.அ. ராமன், நீா் வரத்து வழித்தடங்கள், நீா்பிடிப்புப் பகுதிகள், மழைநீா் வழிந்து வெளியேறும் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளைத் தூா்வாரி வழிந்தோடும் நீா் தடையில்லாமல் வெளியேற நடவ டிக்கை எடுக்குமாறு பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

அதேபோல மதகுகள் சீா்செய்து, பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணமும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவா் அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், சேலம் வருவாய்க் கோட்டாட்சியா் சி. மாறன், மாநகராட்சிப் பொறியாளா் அ. அசோகன், உதவி ஆணையா் சுந்தர்ராஜன், சேலம் மேற்கு வட்டாட்சியா் (பொ) சபுருநிஷா உள்ளிட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத்துறை, மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT