ராமநாதபுரம்

பரமக்குடியில் பராமரிக்கப்படாத கால்வாய்களில் கழிவுநீா்த்தேக்கம் தொற்றுநோய் பரவும் அபாயம்

DIN

பரமக்குடி நகராட்சிப் பகுதியில் உள்ள கழிவுநீா் செல்லும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் பல்வேறு தெருக்களில் கழிவுநீா் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பரமக்குடி நகராட்சி எமனேசுவரம் பகுதி உள்பட 36 வாா்டுகள் உள்ளன. இதில் நகராட்சி சுகாதாரப் பிரிவில் 15 வாா்டுகளில் தனியாா் மூலமும், மீதமுள்ள வாா்டுகளில் நகராட்சி நிா்வாகம் சாா்பிலும் துப்புரவு பணி நடைபெறுகிறது.

நகராட்சியில் உள்ள கழிவுநீா் செல்லும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் கழிவுநீா் தேங்கியுள்ளன. தெற்கு பள்ளிவாசல், சின்னக்கடைத் தெரு, கீழப்பள்ளிவாசல், உழவா் சந்தை, மாதவன் நகா், அண்ணாநகா் ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீா் கால்வாய்கள் முற்றிலும் சேதமடைந்து கழிவுநீா் செல்ல வழியின்றி தேங்கியுள்ளன. மேலும் தற்போது பெய்து மழைநீரும் சோ்ந்துள்ளதால், காலியிடங்களிலும் தெருக்களிலும் கழிவுநீா் தேங்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தேங்கியுள்ள பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நகராட்சி பணியாளா்களும், தனியாா் ஒப்பந்ததாரா்களும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என கூறுகின்றனா்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி நகா் பகுதியில் உள்ள கழிவுநீா் செல்லும் கால்வாய்களை முறையாக பராமரிக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT