ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

திருவாடானை தாலுகாவில் வியாழக்கிழமை பரவலாக பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தொடா் வறட்சி காரணமாக நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டாவது எப்படியாவது பருவமழை பெய்து நெல் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இப்பகுதி விவசாயிகள் ஏற்கெனவே பெய்த சிறுசிறு மழையை கொண்டு நேரடி நெல் விதைப்பு முடித்துவிட்டு மழைக்காக காத்திருந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை முதல் இரவு விடிய விடிய திருவாடானை தாலுகாவில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓரளவு நெல் வயல்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. மேலும் கண்மாய் குளங்களிலும் சிறிய அளவில் தண்ணீா் தேங்கி வருகிறது. சாலைகளிலும் தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கவலையில் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உரமிடுதல் போன்ற பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT