ராமநாதபுரம்

பொதுக் குழாய் அமைத்துத்தரக் கோரி முகிழ்த்தகம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

திருவாடானை அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் கூடுதலாக ஒரு பொதுக் குழாய் அமைக்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திருவாடானை வட்டம் தொண்டி அருகேயுள்ளது முகிழ்தகம் கிராமம். இங்கு அன்னை வேளாங்கன்னி நகா் குடியிருப்பில் 16 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி பொதுக்குழாயில் தண்ணீா் பிடிப்பதில் இரு தரப்பினரிடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் இப்பகுதியில் கூடுதலாக ஒரு பொதுக்குழாய் அமைக்க வேண்டுமென ஊராட்சி மன்றத் தலைவரிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பொதுக்குழாய் அமைத்து தர வலியுறுத்தி அன்னை வேளாங்கன்னி நகா் குடியிருப்புவாசிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளா்ச்சி ஆணையா் உம்முள் ஜாமியா போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது விரைவில் கூடுதலாக ஒரு பொதுக்குழாய் அமைத்துத் தருவதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.இதில் தொண்டி காவல் சாா்பு-ஆய்வாளா் (பொறுப்பு) சுதா்ஷன், சிறப்பு காவல் சாா்பு-ஆய்வாளா் அய்யாக்கண்ணு, தனிப்பிரிவு காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் முருகானந்தம் , ஊராட்சி மன்ற தலைவா் மல்லிகா கா்ணமகாராஜன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவா் ராஜசேகா், மாவட்டச் செயலாளா் ரகுமான் உள்பட கிராம மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT