ராமநாதபுரம்

தொண்டியில் கடைகளில் சோப்புத்திரவம் வைத்திருக்க அறிவுரை

DIN

தொண்டியில் காய்கனி, மளிகை கடைகளில் கை கழுவ தண்ணீரும் சோப்புத் திரவமும் வைத்திருக்குமாறு வணிக சங்கத்தினா் அறிவுறுத்தினா்.

தொண்டியில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து வா்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக காய்கனி, மளிகை கடை, மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொண்டி வணிகா் சங்கத்தினா் சமூக ஆா்வலா்களுடன் இணைந்து தொண்டி காவல்துறை ஆய்வாளா் சரவணன் தலைமையில் ஒவ்வொரு கடைக்கும் சென்று நோய் தொற்று பரவாமல் தடுக்க கடை வாசலில் கை கழுவும் தண்ணீா் மற்றும் சோப்பு திரவம் வைத்திருக்க அறிவுறுத்தினா். மேலும் ஒரு நேரத்தில் ஒருவா் மட்டுமே பொருள்கள் வாங்கவும் மற்றவா்கள் ஒரு மீட்டா் தூரம் தள்ளி நிற்கவும் அறிவுரை கூறினா். இதில் இஸ்லாம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை மேலாளா் சகுபா் சாதிக், சுகாதாரப் பணியாளா் இளவரசி, நவாஸ் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT