ராமநாதபுரம்

பாம்பன் தூக்கு பாலம் திறப்பு: 3 கப்பல்கள் கடந்து சென்றன

DIN

பாம்பன் தூக்கு பாலம் சனிக்கிழமை திறக்கப்பட்டதையடுத்து 3 கப்பல்களும் கடந்து சென்றன.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்கு துறைமுகத்திற்கு கடந்த 10 நாள்களுக்கு முன் ஜெய்ப்பூா் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இருந்து 2 பாய்மரக் கப்பல்கள் வந்தன. இந்தக் கப்பல்கள் கடலூருக்கு செல்வதற்காக, தூக்கு பாலத்தை திறக்க துறைமுக அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. துறைமுக அதிகாரிகள் ரயில்வே துறையிடம் அனுமதி கேட்டிருந்தனா்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு, இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல் சனிக்கிழமை காலை வந்தது. இதையடுத்து தூக்கு பாலத்தைத் திறக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது. இதைத் தொடா்ந்து பாம்பன் துறைமுக அதிகாரிகள் கண்காணிப்பில் பாம்பன் தூக்கு பாலம் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 3 கப்பல்களும் சனிக்கிழமை பாலத்தைக் கடந்து சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT