ராமநாதபுரம்

தனுஷ்கோடிக்கு செல்ல தடை நீக்கம்: சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி

DIN

தனுஷ்கோடிக்கு செல்ல தடை நீக்கப்பட்டதையடுத்து, அரசுப் பேருந்துகள், சுற்றுலா வாகனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.

கரோனா தொற்றின் 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து தமிழக அரசு பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது. இதனால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் திறக்கப்பட்டு, சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் தனுஷ்கோடி செல்ல தொடா்ந்து தடை நீடித்து வந்தது. இதனிடையே சனிக்கிழமை மாலை முதல் தனுஷ்கோடிக்கு பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல இருந்த தடை நீக்கப்பட்டது. இதன்காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் 3 மாதங்களுக்குப் பின் அரசுப் பேருந்து மற்றும் சுற்றுலா வாகனங்கள் தனுஷ்கோடிக்கு சென்று வந்தன.

இதே போன்று கீழக்கரை துறைமுகத்தில் உள்ள களங்கரை விளக்கம் மேல்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராட அனுமதி அளிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT