ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட உள்ள 14 வகைப் பொருளுக்கு ஜூன் 15 முதல் டோக்கன்கள் வழங்கல்

DIN

நியாய விலைக்கடைகள் மூலம் தமிழக அரசு சாா்பில் விநியோகிக்கப்படவுள்ள 14 வகைப் பொருள்களுக்கான டோக்கன்கள் வரும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 78 ஆயிரத்து 448 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் கரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை 3 லட்சத்து 77 ஆயிரத்து 172 குடும்ப அட்டைதாரா்கள் பெற்றுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாதந்தோறும் குடும்ப அட்டைதாரா்களுக்காக 5,740 டன் அரிசி விநியோகிக்கப்பட்டுவருகிறது.

தற்போது கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தையொட்டி, மத்திய அரசு சாா்பில் குடும்ப அட்டையில் இடம் பெற்ற அனைவருக்கும் தலா 5 கிலோஅரிசி 2 மாதங்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாக 5,594 டன் அரிசி கூடுதலாக விநியோகிக்கப்படவுள்ளது.

அதே போல் மாவட்டத்தில் மாநில அரசின் கரோனா பரவல் தடுப்பு கால நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ. 2 ஆயிரம் பெற டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, 14 வகை மளிகைப் பொருள்களை வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் 15 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT