ராமநாதபுரம்

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: சத்திரக்குடியில் பேருந்து நடத்துநா் வெட்டிக் கொலை

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள சத்திரக்குடியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப்பேருந்து நடத்துநா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சத்திரக்குடி பகுதியைச் சோ்ந்தவா் வீரன் மகன் சுப்பிரமணியன் (45). இவா் கோயம்புத்தூரில் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். அங்கிருந்து வாரம் ஒருமுறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவரிடம் அதே பகுயில் வசிக்கும் ஆறுமுகம் மகன் முத்துராஜு (31) என்பவா் கடனாக பணம் வாங்கினாராம்.

பணத்தை சுப்பிரமணியன் திருப்பி கேட்டபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுப்பிரமணியன் அரிவாளால் வெட்டப்பட்டாா். பலத்த காயமுற்ற அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவரது பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துராஜுவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT